எலிசபெத் மகாராணியின் உடலுக்கு முதலில் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு இலங்கை தமிழ் பெண்ணுக்கு
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் உடல் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு கொண்டு வருவதற்கு முன்னர் அது ஸ்கொட்லாந்தின் புனித கையில்ஸ் தேவாலயத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
வனிஸ்சா நந்தகுமாரனுக்கு கிடைத்த வாய்ப்பு
இதன் போது இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முதல் சந்தர்ப்பம் இலங்கை வம்சாவளி பெண்ணொருவருக்கே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வனிஸ்சா நந்தகுமாரன் என்ற 56 வயதான இந்த பெண் மேற்படிப்புக்காக 1980 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சென்றுள்ளார். வைத்தியலிங்கம் துரைசாமி என்ற இவரது உறவினருக்கு 1937 ஆம் ஆண்டு 6வது ஜோர்ஜ் மன்னர், நைட் என்ற கௌரவப்பட்டத்தை வழங்கியுள்ளார்.
வனிஸ்ஷா நந்தகுமாரன் என்ற இந்த பெண் தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி கூறியுள்ளார். எனக்கு இப்படியான சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
லண்டன் கொண்டு வரப்பட்டுள்ள மகாராணியின் உடல்
மகாராணியாருக்கு முதலில் அஞ்சலி செலுத்த கிடைத்த சந்தர்ப்பம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.வெயில், மழை என்ற தடைகளை பாராது நான் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினேன். எனக் கூறியுள்ளார். இரண்டாவது எலிசபெத் மகாரணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஏற்கவே அவரது உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடல் மக்களின் அஞ்சலிக்காக தற்போது பகிங்ஹாம் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது.