கனடாவில் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண்!
கனடாவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிவுள்ளார்.
இதன்படி, ஒண்டாரியோ மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் அனிதா ஆனந்தராஜன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபரல் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடவுள்ளார்.
கட்சியின் வேட்பாளருக்கான நியமன போட்டியில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியின் லிபரல் கட்சியின் உறுப்பினர்கள் அனிதா ஆனந்தராஜனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்து ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார். அனிதா ஆனந்தராஜன் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
இதேவேளை, தற்போது அந்த தொகுதியை Progressive Conservative கட்சி சார்பில் அமைச்சர் Raymond Cho பிரதிநிதித்துப்படுத்துகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam