அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!
அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
மெல்பன் Thomastown-ஐச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்பனில் வாழ்ந்துவந்ததாகவும், உற்பத்தி துறையில் பணிபுரிந்த இவர்கோவிட் பரவலையடுத்து வேலையை இழந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, இவர் உயிரிழந்திருக்கலாம் என அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதாகவும் அரன் மயில்வாகனம் கூறியுள்ளார்.
இதேவேளை தனேஸ்குமாரின் இறுதிநிகழ்வுகளை நடத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளதாகவும் அரன் மயில்வாகனம் மேலும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam