வலிந்து திணிக்கப்படும் இராணுவத்தின் அடக்குமுறை: சிறீதரன் காட்டம்
தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இராணுவத்தின் அடக்குமுறை வலிந்து திணிக்கப்படுவதாகவும், அவ்வாறான இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று(28.05.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், “
பொலிஸார் கைது
இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம்.
அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவு படுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியபோது பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சி காய்ச்சும் போதும் அதனை சப்பாத்து கால்களினால் தட்டி ஊத்தினர். கேட்டால் கஞ்சிக்கு சுகாதாரம் இல்லை என்று அதனையும் கடந்து கடந்த 23மற்றும் 24ம் திகதிகளை பார்க்கும் போது தன்சல என்ற போர்வையில் இராணுவமும் அவர்களுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் எந்த சுகாதார முறையும் அற்று மிக மோசமாக செய்திருந்தனர்.
2009ற்கு பின்பு இவ்வாறு வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கே உரித்தான மொழி ,வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன. சிங்கள அடையாளங்களையும் சிங்கள பண்பாட்டு முறைகளையும் இலங்கை அரசு இங்குள்ள படைகள் மூலம் திணிக்க முயல்கிறது.
போராட்டம் மற்றும் செயற்பாடு
அதனை இந்த முறை வெளிப்படையாக செய்தது. இவ்வாறு செய்த நிலையில் எமது மக்கள் தங்களை மறந்து செயற்பட்டது. மன வேதனை தருகிறது.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் வேடிக்கை பார்த்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எமது கஞ்சிப்பாணைக்கும் கஞ்சிக்கும் நடந்த அடாவடியை மறந்து வரிசையில் மக்கள் நிற்கின்ற போது அந்த நிகழ்வை பார்க்கும் போது எமது இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும்.
கறுப்பின மக்கள் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களுக்காகவே போராடும் போது ஒரு பேருந்தில் ஒரு பெண்ணை வெள்ளையர்கள் தள்ளி வீழ்த்திய போது ஒட்டுமொத்த வெள்ளையர்களும் போக்குவரத்தை தடுத்தனர்.
நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |