தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று (08) வெளியானது.
தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுவேட்பாளராக களமிறங்குவதற்காக தவராசா மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு பா. அரியநேத்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
