தமிழ் அரசியல்வாதிகளே பிரச்சினைகளுக்கு காரணம்: டக்ளஸ் பகிரங்கம்
தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி (kilinochchi) தருமபுரம் வைத்தியசாலை மற்றும் போதைப் பொருள் புணர்வாழ்வு நிலையம் ஆகியவற்றின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ரணிலுக்கு ஆதரவு
இந்த கோரிக்கைகளை நான் அமைச்சரவையில் கொண்டு சென்று இந்த தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றேன்.
குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை அமைச்சரவையில் முன்வைத்திருந்தேன். அதற்கு ஜனாதிபதியும் உறுதிமொழி வழங்கியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை ஆகியவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவையே சாரும். ஆகவே அவருக்குத்தான் எங்களுடைய ஆதரவும் இருக்கும்.
அதேவேளை, தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |