இலங்கையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Sri Lanka Landslide In Sri Lanka Weather Floods In Sri Lanka
By Mayuri Jun 02, 2024 11:07 AM GMT
Report

சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளின் சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான மழை பெய்தமையால் அடுத்த 48 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, குருவிட்ட, அயகம, எலபாத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Landslide Warning In Sri Lanka

வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

அத்தோடு, நில்வலா கங்கையின் மேல் பகுதியில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழையினால் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமுள்ளது.

மேலும், கிங் கங்கையில் பெய்து வரும் கடும் மழையினால் நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய திவித்துர, எல்பிட்டிய, அக்மீமன, பத்தேகம மற்றும் போபே, போத்தல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், களனி கங்கையில் கணிசமான மழை பெய்து வருவதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Landslide Warning In Sri Lanka

முதலாம் இணைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு ஏற்பட்ட பெரும் அனர்த்தம்: இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

நள்ளிரவு ஏற்பட்ட பெரும் அனர்த்தம்: இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

இன்று (02.06.2024) அதிகாலை 04 மணி முதல் நாளை (03.06.2024) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Landslide Warning In Sri Lanka

எச்சரிக்கை நிலை 3 - வெளியேறவும் (சிவப்பு)

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

கொழும்பு மாவட்டம் : - பாதுக்கை

களுத்துறை மாவட்டம் : - மத்துமை - இங்கிரிய - பாலிந்தநுவர - புலத்சிங்கள

இரத்தினபுரி மாவட்டம் : - குருவிட்ட - எலபாத - கிரியெல்ல - அயகம - எஹெலியகொடை - கலவானை - இரத்தினபுரி

இலங்கையை அச்சுறுத்தும் அடைமழை - பெண், சிறுமி உட்பட 5 பேர் பலி - பல இடங்களில் வெள்ளம்

இலங்கையை அச்சுறுத்தும் அடைமழை - பெண், சிறுமி உட்பட 5 பேர் பலி - பல இடங்களில் வெள்ளம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US