தமிழ் அரசியல் கைதியின் சகோதரி உயிரிழப்பு: இரங்கலை தெரிவிக்கும் உறவுகள்
நான் சாகும் போதாவது என் தம்பி தலைமாட்டில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் மன்றாடிய தமிழ் அரசியல் கைதியின் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர், நேற்று(11.03.2026) தனது 79வது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.
நிறைவேறாத ஆசை
கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி என்பவரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தாய்-தந்தை, குடும்பம் உறவு என யாரும் இல்லாமல் தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்தவர், நிறைவேறாத ஆசையோடு இந்த உலகை விட்டு பிரிந்துள்ளார்.
சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து, புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து உயிரிழந்த சகோதரியின் இறுதிச்சடங்கில் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறைக்குள் இருந்து தேம்பிக்கொண்டிருக்கும் அரசியல் கைதி சிவகுமார் போன்றோரின் இயல்பு வாழ்வுக்கு இனி மேலாவது இலங்கை அரசு மனிதநேயத்துடன் முடிவொன்றை எடுக்குமா? என சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 18 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan