டியாகோ கார்சியாவில் - தவறான முடிவெடுத்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள்
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் குடியேற்றத் தடுப்புக் கொள்கைகளுக்கு எதிரான சமீபத்திய பின்னடைவாக, குடிவரவு அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 200 ஆதரவற்ற சிறார்கள் தொடர்பான செய்தி வெளியாகியுள்ள நிலையில், இந்த செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ,மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட 5 புகலிடக்கோரிக்கையாளர்கள் ருவாண்டா தலைநகர் கிகாலியிலிலுள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் டியாகோ கார்சியாவில் 18 மாத சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிற நோய்களுக்காக உளவியல் சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த நவம்பரில் டியாகோ கார்சியாவிலிருந்து 3 புகலிடக் கோரிக்கையாளர்கள்; ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களே மீண்டும் டியாகோ கார்சியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள்
இந்நிலையில் புகலிடக்காரர்களின் தற்கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், பிரித்தானிய அதிகார பிரதேசத்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் உடனடி நலனுக்கான அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எமிலி மெக்டொனல் கோரிக்கை விடுத்துள்ளார்.
டியாகோ கார்சியாவில் ,26 ஆண்டுகால
உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய தொடர்பு படையினரால் 94 புகலிடக் கோரிக்கையாளர்கள்
சித்திரவதைக்குள்ளாகியதுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
22 வயதுள்ள ஹம்சிக்கா என்பவர், கடந்த மார்ச் 1 ஆம் திகதி பென்சிலை கூராக்கும் கருவியை உடைத்து அதன் பிளேட்டை விழுங்கியதாக தி நியூ ஹயூமனிடேரியனிடம் தெரிவித்துள்ளார். குறித்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய அரசாங்க அதிகாரி தெரிவித்திருந்ததன் காரணமாகவே தாம் இதனை செய்தததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் , அதே நாளில், அவரது சக புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.
குறித்த தீவில் 3 பேர் மார்ச் 13 திகதி இதேபோன்ற வழிகளில் தற்கொலைக்கு முயன்றதாக ஹம்ஷிகா கூறியுள்ளதுடன் மார்ச் 1 தற்கொலைக்கு முயன்ற ஹம்ஷிகா மற்றும் கோரிக்கையாளர்களும் இலங்கை இந்தியா பாதுகாப்புப் பிரிவினராலும் காவல்துறையினராலும்; பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.
குடியுரிமை மறுப்பு
அத்துடன் 5 பேர் உட்பட 89 பேர் இலங்கை மற்றும் இந்தியாவை விட்டு வெளியேறி, கனடாவை
அடைய முயன்றபோது, அவர்களது படகு அருகிலுள்ள கடற்பரப்பில் பழுதடைந்தது.
இதனையடுத்து பிரித்தானிய படையினர் அவர்களை மீட்டு தீவில் வேலி அமைக்கப்பட்ட முகாமில் தடுத்து வைத்தனர். இந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் சிலர் இந்தியாவில் உள்ள ஏதிலி முகாம்களில் உள்ள இலங்கை பெற்றோருக்கு பிறந்தவர்கள், அங்கு அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
டியாகோ கார்சியா என்பது பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் 27-சதுர கிலோமீட்டர் பரப்பை கொண்ட பிரதேசம். இது மொரிஷியஸ் மற்றும் சீஷெல்ஸில் உள்ள பிரிட்டிஷ் குடியேற்றத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்ட பகுதியாகும்.
தீவின் பூர்வீக சாகோசியன் மக்கள் 1960 மற்றும் 1970களில் பிரதேசத்தில் ஒரு கூட்டு பிரத்தானிய-அமெரிக்க இராணுவ தளத்திற்கு அமைப்பதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
