ஒரு இலட்சத்து 30,000 தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது "நீதியின் ஓலம்"
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் "நீதியின் ஓலம்" ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார்.
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் கடந்த 23.08.2025 சனிக்கிழமை வடக்கு கிழக்கில் ஆரம்பமானது.
நீதியின் ஓலம்
குறிப்பாக இப்போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி இன்று முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி அந்த 5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் இன்றுடன் நிறைவுக்கு வந்தது.
குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படன. எழுமாத்றாக பெறப்பட குறித்த கையொப்ப போராட்டத்தில் சுமார் 130 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர் என்றும் தெரிவித்தார்.
முன்பதாக கடந்த ஐந்து நாட்களாக தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்ட இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.





இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri