தமிழ்கட்சி எம்.பிக்கள்-அமெரிக்க தூதுவர் சந்திப்பு: பல விடயங்கள் தொடர்பில் பேச்சு
தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (17.07.2023) உயர்ஸ்தானிகர் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது, இலங்கை தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
நீதிக்கான விடயங்கள்
கடந்த வியாழக்கிழமை இரா.சம்பந்தனுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது, கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள், தேசிய அடையாளங்கள், சீர்திருத்தங்கள், பொறுப்பு கூறல் மற்றும் நீதிக்கான விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக முன்னோக்கிப் பயணித்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |