வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் த.தே.கூட்டமைப்பு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் கலந்துரையாடலொன்றுக்காக அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
சந்திப்பானது கொழும்பில் உள்ள சம்பந்தனின் வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலந்துரையாடல்
அதிகாரப்பகிர்வு தொடர்பான பொதுவான கருத்தை எட்டுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், முன்னதாக குறித்த கூட்டம் கடந்த 15ம் திகதி இடம்பெறவிருந்த போதும் கூட்டம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam