யாழ். சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (11.02.2023) மாலை இடம்பெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வை ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நாளை (11.02.2023) மாலை இடம்பெறவுள்ளன.
இதில் கலந்துகொள்ளுமாறு வடக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதில் ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பனவற்றின் நிலைப்பாடு இதுவரை தெரியவரவில்லை.
போராட்டத்திற்கு அழைப்பு
யாழில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளதுடன் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
நாளை சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு
முன்பாக அனைவரையும் ஒன்றுகூடுமாறு அக்கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)