கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மகளிர் தின நிகழ்வு
கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மகளிர் தின நிகழ்வு தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணித்தலைவி கௌசலா ஜெயக்காந்தராசா தலைமையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராத்தின் அரசியல் ஆலோசகர் பானு பிரகாஷ் முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவட்டத்தில் சிறந்த தலைமைத்துவம்
மற்றும் பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.