யாழில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி நாள்
தாயகத்தமிழரின் தேசியக்குரலை அனைத்துலகத்திற்கு பறை சாற்றும் முகமாக தமிழ் தேசிய எழுச்சி நாள் யாழில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 10மணியளவில் கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
வாருங்கள் உறவுகளே
''தந்தை செல்வா காட்டிய கொள்கையை தகர்த்தெறியாமல் பாதுகாப்போம் வாருங்கள் வடகிழக்கு தமிழ் உறவுகளே'' என ஏற்பாட்டுக்குழுவின் அழைப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் தேசியம் சார்ந்த கலைநிகழ்வுகள் , உரைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
