மாவை தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள்: விக்னேஸ்வரனின் யோசனைக்கு ரெலோ அமைப்பு வரவேற்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை ரெலோ இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வரவேற்றுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத சூழலில் அது இனப்பிரச்சினைக்கான தீர்வில் பாதக நிலைமையைத் தோற்றுவிக்கும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியத் தரப்புக்கள் ஓரணியில் திரளலாம் என தெரிவித்துள்ளார்.



