வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய முன்னணியினர் (photos)
யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையைப் பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சத்தீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்த் தேசிய முன்னணியின் குழுவினர் வெடியரசன் கோட்டைப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் (29.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம், பிரதேச செயலகத்தின் முன்பாகவும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.
பௌத்தமயமாக்கும் நடவடிக்கை
இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில்
நெடுந்தீவு மக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தொிவித்துள்ளனா்.
தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து பௌத்தமயமாக்கும் நடவடிக்கையை நிறுத்து... வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து... எனப் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்திற்கு அழைப்பு
இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை உச்சியிலே அமைந்திருந்த ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்து நாளைய தினம் (30.03.2023 ) நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்குத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது அத்துடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
















மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
