மோடியை சந்திக்கும் கூட்டமைப்பினர்! - இந்தியா வகுக்கும் திட்டம்
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விஜயத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூடவுள்ளது.
இந்நிலையிலேயே, கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து விவாதித்து ஆலோசனை வழங்க கூடும் என நம்பப்படுவதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam