இறுதி கட்டத்தை நெருங்கும் தேர்தல் முடிவுகள் - தமிழக வெற்றிக்கழக விஜயிக்கு குவியும் வாழ்த்து
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜயின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
“சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய தவெகவிற்கு எங்களது வாழ்த்துகள்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், மாலை 6 மணி நிலவரப்படி தவெக 86 இடங்களில் வெற்றி, 21 இடங்களில் முன்னிலை என மொத்தம் 107 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. திமுக 48 இடங்களில் வென்று 25 இடங்களில் முன்னிலை என மொத்தம் 73 இடங்களில் முன்னிலையில் இருந்துவருகிறது.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தவெகவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து
இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசியலில் பிரமாண்டமான அறிமுகத்தைப் பெற்றிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை மனதார வாழ்த்துகிறேன். மக்கள் நம்பிக்கையோடு, தமிழக முழுவதும் வாக்களித்ததற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பின்னடைவை சந்திக்கும் வேட்பாளர்கள் சோர்வடைய வேண்டாம். இது வெறும் தேர்தல் வாக்குகள் மட்டுமே, ஒரு போட்டியாகதான் பார்க்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம்
அந்த வகையில் நடிகர் விக்ரம் இன்டாகிராம் பக்கத்தில் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள விக்ரம், "வாழ்த்துகள் நண்பா விஜய். இன்று நீ சரித்திரம் படைத்துவிட்டாய்" என்று தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி
அந்த வகையில்,நடிகை கஸ்தூரி தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இவ்வாறு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கோடிக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டுவருவீர்கள் என நம்புகிறேன். இந்த மகத்தான சாதனைக்கு உங்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி வாழ்த்து
தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சூரி வாழ்த்துககளை தெரிவித்துள்ளார்.
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரடி திருப்பங்களுடன் அடுத்தடுத்து பதிவாகும் வரலாற்று மாற்றம்! தகர்க்கப்பட்ட தி.மு.க. கோட்டை: எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் குழப்பம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்