இலங்கை மக்களுக்கு உதவிகரம் நீட்டியுள்ள தமிழக மக்கள்! நிவாரணபொருட்களுடன் வரும் மற்றுமொரு கப்பல்..
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.
950 டன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா! துள்ளிக்குதித்து கொண்டாடிய வீரர்கள் - இரசிகர்கள்..
தமிழக மக்களும் உதவி
குறித்த நிவாரணப் பொருட்களை தாங்கி வரும் கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று (6) கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார்.

சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேஷ்டி, 5 ஆயிரம் சேலை, 1,000 தார்பாலீன் ஆகியவையும், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால்மா பொதிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
“இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 6, 2025
கடனறி காட்சி யவர்" (குறள் 218)
வறுமையிலும் பிறர்க்கு உதவ வேண்டும் என்பதுதான் வள்ளுவம் காட்டும் தமிழறம்!
எனவே, கடல் கடந்த நம் சொந்தங்கள், இலங்கையில் #CycloneDitwah-வினால் பெரும் இழப்புகளைச் சந்தித்து இன்னலுறும் இத்தருணத்தில், அவர்களுடன்… pic.twitter.com/GMA1tNWT5J
தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 மெற்றிக் டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா பல உதவிகளை செய்துள்ளதை போன்று ஏனைய நாடுகளும் இலங்கைக்கு உதவிகரம் நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.