இலங்கையில் சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய கோரி தமிழகத்தில் நடைபயணம்
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மூன்று நாள் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று (20) குறித்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து தொழிலுக்கு சென்று கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 23 கடற்றொழிலாலர்கள் மீதான வழக்கு கடந்த 16ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
[YHFFMTN ]
வழக்கை விசாரித்த நீதிபதி
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கடற்றொழிலாலர்கள் 20 பேரை விடுதலை செய்ததுடன் அதிலிருந்த இரண்டு கடற்றொழில் விசைப்படகின் ஓட்டுநருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒருவர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதால் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாலர்கள், கடந்த நான்கு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று (20) காலை சுமார் 9 மணி அளவில் இராமேஸ்வரம் துறைமுகம் அருகே உள்ள கடற்றொழில் அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து சுமார் 600ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாலர்கள் அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மூன்று நாள் நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் தொடங்கிய நடைபயணம் திட்டக்குடி வழியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை கடந்து ராமநாதபுரம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது.
சுமார் 600 க்கும் மேற்பட்டோர் தொடர் நடைபயணத்தில் ஈடுபட்டு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 900 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், ,நடைபயணத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் கடற்றொழிலாலர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
