கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் மீட்பு!
தற்போது நிலவும் கடும் காற்று காரணமாக திசைமாறி இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கடற்றொழிலாளரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்
இன்று (23) மாலை சுமார் 4.30 மணியளவில் கடலில் தத்தளித்த நிலையில் இருந்த குறித்த கடற்றொழிலாளரை நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த நெடுந்தீவு பொலிசார், குறித்த கடற்றொழிலாளரை நாளை (24) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.