பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்
பிரித்தானியாவில் நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(23) நாடு திரும்பியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு பொதுநலவாய கற்றல் (COL) ஆளுகைக் குழுவின் 43வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் இருதரப்பு, கல்வி மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் கடந்த 18 முதல் 22 வரை ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அவர் நாடுதிரும்பியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள அபிவிருத்தி ஆய்வுகள் நிறுவனத்தின்(IDS) 60வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு தனது உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்கிய பிரதமர், பின்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகள் கல்லூரியால் (OSGA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் 2026 புனித அந்தோணியார் கல்லூரி சொற்பொழிவை ஆற்றினார்.

பின்னர் அவர் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை சமூகத்தினருடன் ஒரு தனி கூட்டத்தில் கலந்துகொண்டார்.
தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் ஹரினி அமரசூரிய, இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளார்.

ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri