யாழ்ப்பாண சித்த மருத்துவ விரிவுரையாளருக்கு இந்தியாவில் கிடைத்த பதக்கம்
இலங்கை - யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டாக்டர் நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S) பரீட்சையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழகத்தனால் அறிவிக்கப்பட்டுளளது.
2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவ பல்கலைக்கழகத்தினால் குழந்தை மருத்துவத்றையில், நடாத்தப்பட்ட பட்டமேற்படிப்பு ((MD)பரீட்சையில் முதலிடம் பெற்று தங்க பதக்கத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இவர் தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டிலிந்து 2022 ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில் 3 ஆண்டுகளிலும் நடைபெற்ற MD பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற தகுதி பெற்றுள்ளார்.
சிறப்பு விருதுகள்
இதுவரை காலத்திலும் சித்தமருத்துவத்தில் குழந்தை மருத்துவத்றையில் இலங்கையையிலிருந்து சென்று பட்டமேற்படிப்பை முடித்து வந்த இரண்டாவது மருத்துவர் என்பதும், வரலாற்றில் இலங்கையையிலிருந்து சென்று தங்க பதக்கத்தை பெற்ற முதல் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்பிலும் இறுதியாண்டில் முதல் தரத்தில் சித்தியெய்து முதலிடம் பெற்று பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருதுகளை பெற்றமை குறிப்படத்தக்கது.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
