ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட மாநாடு
ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை (Kegalle) மாவட்டத்திற்கான மாநாடு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடானது, நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganeshan) தலைமையில் எட்டியாந்தோட்டை - கே.ஜி .எல். குணவர்த்தன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக வலய, தோட்ட பிரிவு வலய மற்றும் நகர வலய அமைப்பாளர்களின் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய முழு மாவட்டம் தழுவிய கட்டமைப்பில் மாநாடு இடம்பெறும்.
பங்கேற்போர்
மேலும், கூட்டணியின் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், மாவட்ட கட்சி அங்கத்தவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேவேளை, இந்த மாநாடு, “ஒன்றிணைந்து வெல்வோம்! தேசிய அரங்கில் இடம்பெறுவோம்!” என்ற தொனிபொருளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |