வடக்கு மாகாண ஆளுநர்-அமைச்சர் டக்ளஸின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறிய அங்கஜன்(Video)
யாழ்ப்பாணத்தில் இன்று(04.05.2023) நடைபெறும் அபிவிருத்தி குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தையிட்டி பகுதிக்கு விரைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அபிவிருத்தி குழு கூட்டம் வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
கலந்துரையாடல்
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று (04.05.2023) தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று கலந்துரையாடியுள்ளனர்.