அமெரிக்கா-சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் நேற்றையதினம்(20) செவ்வாய்க்கிழமை அந்தந்தத் தூதரங்களில் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சிரேஷ்ட சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோர் அமெரிக்கத் தூதரகத்தில் அந்த நாட்டுத் தூதுவரைச் சந்தித்தனர்.
தமிழ் மக்கள்
இதன்போது அவர்கள், தமிழ் மக்களுக்குச் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வு வேண்டும், வடக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பை அரசு நிறுத்த வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்பின்னர் மேற்படி குழுவினர் சுவிஸ் நாட்டுத் தூதுவரைச் சந்தித்துத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
