கனடாவில் குடியுரிமை கோரி தமிழர் ஒருவர் செய்த காரியம்! - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
கனடாவில் தமிழர் ஒருவர் கனடிய குடிவரவு அலுவலகத்திற்கு முன்பாக தற்கொலை செய்வதாக தெரிவித்து போராடிய நிலையில், பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு அலுவலகத்திற்கு முன்பாக தற்கொலை செய்வதாக கத்தி, கூச்சல் இட்டபோது குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு குடியுரிமை மறுக்கப்படுவதாகவும், அத்துடன் தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி அடைத்து வைக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
எரிப்பொருள் கொண்ட ஒரு கலனை கையில் வைத்து கொண்டு கனடிய குடிவரவு அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
You My Like This Video