தமிழ் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை
நுரைச்சோலை பகுதியில் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 45 வயதுடைய வடிவேல் செந்தூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகாத உறவால் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து நேற்றுமுன்தினம்(18.10.2026) இரவு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் இரகசிய உறவினை அறிந்த கணவன், கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பெண் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கொடூரமாக அடித்துக் கொலை
இந்நிலையில் கொலை செய்யப்பட்டவருக்கும், தனது மனைவிக்கும் இடையிலான தொடர்பு நீடித்த நிலையில் ஆத்திரமடைந்த கணவன் கொலை செய்ததாக தெரிய வருகிறது.

கடந்த 18ஆம் திகதி இரவில் குறித்த நபர் வீதியில் சென்று கொண்டிருந்த போது அவரைத் தாக்கி அருகிலிருந்த தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் தள்ளியதாகவும், மண்வெட்டி மரக்கட்டையால் இரக்கமின்றி கொடூரமாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் பொலிஸாரிடம் சாட்சியமளித்துள்ளார்.
எனினும், தாக்குதல் நடத்தப்பட்டு தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் தள்ளப்பட்டதைக் கண்ட அயலவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அத்துடன், 15 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரைப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அதற்கு முன்னரே உயிரிழந்திருந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான நான்கு பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.