சமஷ்டியை தீர்வாக முன்வைத்துள்ள சுமந்திரன்: பிளவுபடும் தமிழ் எம்.பிக்களின் கோரிக்கை
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியே அமைய முடியும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று(17.07.2023) தனது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் எமது ஊடகத்திற்கு இன்றையதினம்(17.07.2023) பிரத்தியோகமாக வழங்கிய செய்தியிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சட்டரீதியாக சமஷ்டி கோரிக்கை
சட்டரீதியாக சமஷ்டி கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் பறிக்கப்படுதல் தொடர்பில் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தினை தமிழ் தேசிய கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்துவதி வருகின்றன.
ஆனால் தற்போது விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் 13ஆம் சீர்திருத்தத்தினையும், சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் சமஷ்டியினையும் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தரப்பினர் அதி உச்ச சமஷ்டியினையும் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் பிளவுபட்ட கோரிக்கையை தற்போது அமெரிக்காவிடம் தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்துள்ளமை, தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங், அதிகாரப் பகிர்வின் முக்கியத்துவம், காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிலை கண்டறிதல், மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள், உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்கான முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறியுள்ளர்.
Honored to engage in productive discussion w Tamil leaders from N & E SL today. Discussed importance of devolution, land returns & finding answers for families of missing persons, incl investigations into mass graves, as SL strives for truth, reconciliation, and lasting peace. pic.twitter.com/8rQBgWMZfh
— Ambassador Julie Chung (@USAmbSL) July 17, 2023