தமிழ் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த தவிசாளர் - வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்ட தகவல்
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உள்ள தமிழ் cஒருவரை வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் மிரட்டியதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(29.05.2026) இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த வாரம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர்கள், தமிழ் மக்களின் பல பிரச்சனைகளை முன்வைக்கவில்லை என குறித்த ஊடகவியலாளர் கல்குடா சிவில் சமூகம் என இயங்கிவரும் வாட்ஸ் அப் குழுவில், தவிசாளர்கள் குறித்து மோசமான குற்றச்சாட்டுடன் கருத்தொன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், வாழைச்சேனை பிரதேச சபைக்கு பொறுப்பான தமிழரசுக் கட்சியின் உப தவிசாளர் குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கே சென்று அவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளர் உப தவிசாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan