தமிழர் பகுதியில் தொடரும் இராணுவ அட்டகாசம்..! சி. சிறிதரன் எம்.பி காட்டம்
காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது, மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரியுள்ளார்.
மயிலிட்டி பகுதியில் இன்று(29.07.2026) காணி விடுவிப்பு கோரி நடைபெற்ற கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலி. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் , யுத்தம் முடிவடைந்து, 17 வருடங்கள் கடந்த நிலையிலும் சொந்த மண்ணில் மீள் குடியேற அனுமதிக்கவில்லை.

தற்போதும் அந்த மக்கள், தமது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தங்கி வாழ்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் காணிகளை விடுவிப்போம் என கூறி ஆட்சிக்கு அநுர அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரையில் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடத்தி வருகின்றனர். தோட்டங்களில் விவசாயம் செய்து மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை.
17 வருடங்களாக தெருக்களில் வாழும் மக்கள்
17 வருடங்களாக யுத்தங்கள் இல்லாத போதிலும் மக்கள் இதுவரையில் தெருக்களில் வாழ்கின்றார். இந்த அரசாங்கமும், முன்னைய அராஜக அரசாங்கம் போன்றே செயற்படுகின்றனர். மக்களின் கோரிக்கைகள் நியாயமானதாகவே பார்க்கப்படுகின்றது.
சர்வதேச அமைப்புக்கள், மனித உரிமை, செயற்பாட்டளர்கள் என இங்கே நேரில் வந்து இந்த காணிகளை பார்வையிட்டால் தெரியும்.
இங்கு இராணுவ முகாம்களுக்காக காணிகளை கையகப்படுத்தவில்லை. இந்த மக்கள் தமது சொந்த காணிகளில் விவசாயம் செய்து அவர்கள் தமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு தனியார் காணிகளில் இராணுவ வைத்தியசாலையை கட்டுகிறது, தனியார் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்கிறது.

இந்த காணிகளை உடனடியாக விடுவியுங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், விடுவிக்கப்பட வேண்டிய காணிகளையும் இதுவரையில் மீள் குடியேற்றப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பில் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்.
அதன் அடிப்படையில் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய தொடர் அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம் மக்களின் நியாமான கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்து, மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காலங்களை இழுத்தடிக்கும் வார்த்தைகளை தவிர்த்து, மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri