குமுழமுனையில் பேணப்படும் தமிழர் பாரம்பரியக்கலையான குதிரையாட்டம்
முல்லைத்தீவு குமுழமுனையில் தமிழர் பாரம்பரியக்கலைகளில் ஒன்றான பொய்க்கால் குதிரையாட்டம் இன்றும் சிறப்பாக பேணப்படுகின்றது.
பொய்க்குதிரையை வடிவமைத்து அதனைக் கொண்டு குதிரையாட்ட நிகழ்வை குன்றில் குமரன் கோவிலில் நிகழ்த்துவதற்கான முயற்சிகளில் குமுழமுனையின் குதிரையாட்டக் கலைஞர்கள் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
குன்றில் குமரன் கோவிலின் பத்து நாள் திருவிழா பூசைகள் அண்மையில் ஆரம்பித்து நடந்து வருகின்றனர்.
குதிரை வடிவமைப்பு கலை
குமுழமுனையைச் சேர்ந்த குதிரை வடிவமைப்புக் கலைஞர் சிறி இம்முறை குன்றில் குமரன் கோவில் திருவிழாவுக்காக இரு குதிரைகளை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கின்றார்.
குதிரை வடிவமைப்பில் வடிவமைப்பாளர் சிறியும் அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டிருக்கிறனர்.
பாரம்பரியக் கலைகள் அழிந்துவரும் இன்றைய சூழலில் குதிரையாட்டம் தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
முள்ளியவளையில் உள்ள கலியாணவேலவர் ஆலயம், காட்டா விநாயகர் ஆலயம், குமாரபுரம் முருகன் கோயில் மற்றும் குமுழமுனை குன்றில் குமரன் ஆலயத்திலும் குதிரையாட்ட கலை நிகழ்வுகளை அவதானிக்கலாம் என குதிரையாட்ட கலைஞர் செந்தூரன் குறிப்பிட்டிருந்தார்.