கனடாவில் வெகுவிமர்சையாக இடம்பெறும் தமிழர் நிகழ்வு (Live Now)
கனடாவில் வெகுவிமர்சையாக தமிழ் மரபுத்திங்கள் இணையவழி பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
குறித்த இணையவழி பெருவிழா 2022 22-01-2022 , சனிக்கிழமை கனேடிய நேரம் பிற்பகல் 3:00 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வானது கனடாவில் வெகுவிமர்சையாக எமது ஐபிசி தமிழின் ஊடக அனுசரனையுடன் நேரலையாக இடம்பெற்று வருகின்றது.
தமிழ் மரபு திங்களுக்கான பிரித்தானிய அரச பேரறிவிப்பினைப் பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத்திங்கள் செயல்பாட்டுக் குழுவினர் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் நடாத்தி வருகின்றனர்.
குறித்த நிகழ்வில் நேரலையாக கலந்துக்கொள்ளவுள்ளோர் இணைப்பு ஊடாக இணைந்துக்கொள்ளலாம்.https://us06web.zoom.us/j/81801602741
கனடாவின் பிராம்டன் நகர் வாழ் தமிழ் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிராம்டன் நகரசபையினால் நகரசபையின் பிரதான பூங்காவில் 'தமிழினப்படுகொலை நினைவுத்தூபி' அமைப்பதற்கு அனுமதி வழங்கும் தீர்மானம் கடந்த வருடம் ஜனவரி 20ஆம் நாள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு,கனடாவின் அரசியல் பிரமுகர்களும் கட்சி பேதமின்றி தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றார்கள்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்ததுபோன்ற இனப்படுகொலை இனிமேல் உலகின் எப்பகுதியிலும் நடக்காதிருக்கச் செய்யும் செயல்பாடுகளுக்கு உந்துதல் தரும் வகையில் இந்த நினைவுத்தூபி இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அந்த வகையில்,இதற்கான முதலாவது ஏற்பாட்டாக மாபெரும் நிதிசேர் நிகழ்வு உலகளாவிய ரீதியில் இணையம் வழியாக இன்று ஜனவரி 22ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பதற்கான மெய்நிகர் நிகழ்வு