கனடாவில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி.. பெரும் அதிர்ச்சியில் அநுர அரசு!
தமிழர் தரப்பில், நேற்றைய தினம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கனடாவில் பிரம்டனில் அமைக்கப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி இடம்பிடித்துள்ளது.
ஈழத்தமிழரகளுக்கு அளிக்கப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என கனடா - பிரம்டன் மாநகரத்தின் முதல்வர் பட்ரிக் பிரவுண் கடுமையாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கனடாவில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிக்கும் பணியில் தான் எதிர்கொண்ட பல சிக்கல்களையும் சவால்களையும் பற்றியும் பட்ரிக் பிரவுண் அங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்தவகையில், குறித்த நினைவுத்தூபியை அமைக்கும் பணிக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த குடைச்சல்கள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
