யாழில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்
இந்த ஆண்டு நடைபெற உள்ள 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்று (18.06.2024) காலை சங்காணை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் தமிழ் மக்கள் ஒன்றுசேர தவறும்பட்சத்தில் தமிழ்மக்களின் வாக்குகளும் பலமும் சிதறும் ஆபத்துக்கள் பற்றியும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பாக கலந்துகொண்டோர் விளக்கமளித்துள்ளனர்.
கேள்வி பதில் உரையாடல்
அத்துடன் கலந்துகொண்ட உறுப்பினர்களிடையே கேள்வி பதில் உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்துவரும் நாட்களில் தங்களின் பங்களிப்பும் இருக்கும் என கலந்துகொள்ளும் மக்கள் அமைப்புகளின் அங்கத்தவர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை(14.06.2024) கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam