சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த தயாசிறி: பாரத் அருள்சாமி கருத்து

Ceylon Workers Congress Ranil Wickremesinghe Dayasiri Jayasekara Economy of Sri Lanka
By Thirumal Jun 19, 2024 10:45 AM GMT
Report

கண்டி (Kandy) மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் டீல் அரசியலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara) அம்பலப்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி (Barath Arulsamy) தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) திரைக்கு முன்னால் விமர்சித்து விட்டு திரைக்குப் பின்னால் பணத்தைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தயாசிறி ஜெயசேகர சமர்ப்பித்து இருந்தார்.

இதில் வியக்க வைக்கும் முகமாக தற்போதைய அரசாங்கத்தையும் ஜனாதிபதியும் விமர்சித்து பிழைப்பு நடத்தும் கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரும் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் - முற்றாக வெளியேறும் மகிந்த

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் - முற்றாக வெளியேறும் மகிந்த

பொருளாதார ஸ்திரத்தன்மை

நாடு பொருளாதார சிக்கலில் வீழ்ந்திருந்த போது, இந்த மக்களுக்காக இந்த நாட்டை மீட்டெடுக்க ரணில் விக்ரமசிங்க பல புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் எமது வெளிநாட்டு கொள்கைகளை சாணக்கியமாக பயன்படுத்தி சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறார்.

அவரின் இந்த கடினமான பயணத்திற்கு தோள் கொடுக்கும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் நலன் கருதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னிருத்தி அவருக்கு நேரடியான ஆதரவை வழங்கியது.

சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த தயாசிறி: பாரத் அருள்சாமி கருத்து | Dayasiri Tore The Veil Of Selfish Politicians

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் எமது இளைய சமுதாயம் எதிர்பார்த்த பொறுப்பு கூறல் மற்றும் வலுவான கொள்கைகளை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றது. 

இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கைகளை மரண சாசனமாக விமர்சித்த வேலுகுமார், காலையில் சஜித் வாழ்க என்று கோஷம் எழுப்பி விட்டு இரவில் ரணில் விக்ரமசிங்கவிடம் தஞ்சம் புகுந்து பணம் பெற்றுக் கொண்டிருப்பது மிக வேடிக்கையாக உள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் என்றும் ஒரு கொள்கையோடு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர் ஆவார். ஆனால், அவரின் கட்சி பிரதிநிதியோ அவருக்கே தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்போகிறார் என்பதை மக்கள் கூர்ந்து அவதானித்து வருகிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்

தயாசிறி ஜெயசேகர சபையில் இப்பட்டியலை வெளியிட்டபோது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

உடனே அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃப் ஹக்கீம் அவர்கள் அவ்வாறு கட்சிக்குத் தெரியாமல் இவ் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் அவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என கூறினார்.

சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த தயாசிறி: பாரத் அருள்சாமி கருத்து | Dayasiri Tore The Veil Of Selfish Politicians

அண்மையில் கண்டியில் புதிய மதுபானசாலைகளை கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டுள்ளதாக பௌத்தப்பிக்குகள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

அது மக்கள் மனதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்ததுடன் தற்போது ஜனாதிபதியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதும் பௌத்தப்பிக்குகளின் சந்தேகத்திற்கும் ஒற்றுமையுள்ளதாக கருதப்பட வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

உத்தேச வாடகை வரி: சர்வதேச நாணய நிதிய நிபந்தனை குறித்து லக்ஸ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ள தகவல்

உத்தேச வாடகை வரி: சர்வதேச நாணய நிதிய நிபந்தனை குறித்து லக்ஸ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ள தகவல்

வடக்கை சிங்களமயமாக்கும் ரணில்: தமிழ் எம்.பி குற்றச்சாட்டு

வடக்கை சிங்களமயமாக்கும் ரணில்: தமிழ் எம்.பி குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US