கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவாலயம்! உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட வரைகலைப் போட்டி (Video)

Mullivaikal Remembrance Day Canada
By Jenitha Mar 30, 2023 07:34 PM GMT
Report

முள்ளிவாய்காலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்த துறைசார் வல்லுனர்கள் அது ஈழத்தின் வசந்தகாலம்.

நிழல் அரசொன்றின் தலைமுத்துவத்தின் கீழ் அதன் அணுசரனையில் அரவணைப்பில் ஒழுங்கிணைக்கப்பட்ட முயற்சியில் புலத்தில் உலகெங்கும் பரந்திருந்த பல்துறைசார் வல்லுனர்களும் வன்னியில் குவிந்தகாலம்.

தமது மக்களின் முன்னேற்றத்தில் தமது தேசத்தின் அபிவிருத்தியில் தங்களால் ஆன பங்களிப்பிற்காக அவர்கள் திரண்ட காலம் அது.


2002 இல் இருந்தான அச்செற்பாடுகளின் பரிணாமவளர்ச்சியும் அதன் உலகளாவிய முன்னெடுப்புகளும் ஒரு பெரும் வரலாறு. இம்முயற்சிகளும் முள்ளிவாய்காலில் வைத்து சிதைக்கப்பட்டதன் பின் தலைமைத்துவமும் இன்றி ஒருங்கிணைப்பும் இன்றி அவை தேக்கநிலையை அடைந்தன.

இந்நிலையில் 2021 ஜனவரியில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த எம் மக்கள் இனப்படுகொலை நினைவாலயம் இடித்தழிக்கப்பட்டபோது புலத்தில் கனடாவின் பிராம்டன் நகரில் நகரசபை பிரதான பூங்காவில் ஒரு தமிழினப்படுகொலை நினைவாலயம் அமைக்கும் வாய்ப்புக்கிட்டிய போது அதை மையப்படுத்தி மீண்டும் ஒரு வாய்ப்பாக அத்துறைசார் வல்லுனர்கள் இணையும் வாய்ப்பு ஏற்ப்படுத்தப்பட்டது.

அவர்களின் முழுமையான பங்களிப்புடன் அமைந்த தமிழ் இனப்படுகொலை நினைவாலய அமைப்பு அவர்களால் நன்கு திட்டமிடப்பட்டு உலக வரைகலை அமைப்பான பீ பிரிடேர்ஸ் இன் அனுசரணையைப் பெற்று உலகளாவிய தமிழ் இனப்படுகொலை நினைவாலயம் ஒன்றிற்கான வடிவத்தை முதன்மைப்படுத்திய ஒரு வரைகலைப் போட்டியை உலகளவில் நடத்தினர்.

அப்போட்டிக்கான செலவுகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான 10 ஆயிரம் யூரோ பணப்பரிசில்கள் என அனைத்தையும் அந்நிறுவனமே பொறுப்பேற்க நடத்தப்பட்ட போட்டியில் உலகின் பல முதன்மை நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து 100க்கும் மேற்ப்பட்ட வரைகலை போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவாலயம்! உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட வரைகலைப் போட்டி (Video) | Tamil Fenocide Memorial In Canada

பீ பிரீடேர்ஸ் என்ற அச்சர்வதேச அமைப்பின் உலகளாவிய வல்லுனர்கள் அறுவர் அதில் 40 சிறந்த வரைகலைகளைத் அதில் இருந்து தெரிவு செய்தனர்.

அவை தமிழ் இனப்படுகொலை நினைவாலய அமைப்பிடம் கையளிக்கப்பட்டன. தமிழ் இனப்படுகொலை அமைப்பின் நிர்வாக சபையால் தெரிவு செய்யப்பட்ட உலகளாவிய 13 தமிழ் பல்துறை வல்லுனர்கள் அவற்றை ஆராய்ந்து தமது முதன்மைத் தெரிவுகளை வரிசைப்படுத்தி வழங்க அவை தொகுக்கப்பட்டு முதல் இடத்தில் இருந்து ஏனைய இடங்களிற்கானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இச்செயற்பாடு தமிழ் இனப்படுகொலையை தமிழரல்லாத துறைசார் வல்லுனர்கள் மத்தியில் மட்டுமல்லாது உயர்கல்வி நிறுவனங்கள் வரை கொண்டு சேர்த்தது மட்டுமன்றி புலத்தில் பிரம்டன் நகரைக் கடந்தும் உலகளாவி தமிழ் இனப்படுகொலை நினைவாலயங்களை அமைப்பதற்கான வடிவத்தையும் அதற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப விபரங்களையும் பெற்றுத்தந்துள்ளது.

இதனை மையமாகக்கொண்டு அதில் தமிழ் இனப்படுகொலையின் பல விபரங்களையும் தொழில்நுட்பம் சார்ந்து பலமொழி இணையம் மற்றும் ஆவணங்கள் உட்பட ஒருங்கமைக்கும் பணியையும் எமது வல்லுனர்கள் சிறப்பாக முன்னெடுத்துள்ளனர்.

பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் முகாமைத்துவ நிபுணர்கள் வரைகலை நிபுணர்கள் இளையவர்கள் பெண்கள் என பலதுறை வல்லுனர்களின் மீண்டும் ஒரு தாழில்நுட்ப ஒருங்கிணைப்பு தொடர்ந்தும் வலிகளையே சுமந்து நிற்கும் ஈழத்தமிழினத்திற்கு நிச்சயமாக ஒரு நிவாரணியாகும்.

இதில் பலர் வன்னியில் தொடர்ந்து பல்துறைசார் தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களாக தலைமையின் உச்சமான நேசத்திற்கு உரியவர்களாக திகழ்ந்தவர்கள். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US