கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினரின் தொடர்பில் வெளியான தகவல்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேஸ் அவுஸ்திரேலியா தன்னை இலங்கைக்கு நாடு கடத்தினால் தான் கொலை செய்யப்படலாம் என அச்சமடைந்துள்ளார் என அவுஸ்திரேலிய தொழில்கட்சியின் செனெட்டர் கிறிஸ்டினா கெனியலி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ்தீவிற்கு சென்று கடந்த நான்கு நாட்களாக நடேஸ்பிரியா குடும்பத்தினரும் தங்கியிருந்த செனெட்டர் இதனை தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்புமுகாமில் வாழ்வதற்கு அவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர் சமாளித்துவாழ்கின்றனர் என செனெட்டர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர்தெரிவித்துள்ளார் அவர்களின் தாய் தனிமையில்சிக்கியுள்ளார் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார் எனசெனெட்டர் தெரிவித்துள்ளார். அவர்களின் தந்தை நடேஸ் அமைதியானவராக காணப்படுகின்றார் ஆனால் அவரின் முகத்தில் ஆழமான சோகத்தை அவதானிக்க முடிகின்றது எனவும் செனெட்டர் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னால் தீர்வு காணமுடியாத பிரச்சினையில் சிக்குண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள செனெட்டர் கிறிஸ்டினா கெனியலி அவரால் தொழில்பார்க்க முடியாது,அவரால் தனது குடும்பத்தை பாராமரிக்க முடியாது இந்த நெருக்கடியிலிருந்து விடுபடவும் முடியாது என செனெட்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் தான் கொல்லப்படுவேன் என நடேஸ் அச்சமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ள செனெட்டர் அவர் தனது இரண்டு பிள்ளைகளும் அனாதையாவதை விரும்பவில்லைஎனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கோ அல்லது வெளியில் செல்வதற்கோ அனுமதிக்கப்படும்போது குழந்தைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் ஆனால் தடுப்பில் அவர்கள் எந்த மகிழ்ச்சியும்அற்றவர்களாக மாறிவிடுகின்றனர் எனவும் செனெட்டர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri