தமிழன் பற்றாளர்களில் ஒருவரான நடராசா பாலசிங்கம் பிரான்சில் காலமானார்
தாயக விடுதலையின் பக்கம் நின்று அயராது உழைத்த பற்றாளர்களில் ஒருவரான நடராசா பாலசிங்கம் (பாலா) அவர்கள் இயற்கையெய்தியுள்ளார்.
ஏப்ரல் மாதம் 21ம் திகதி 2021 பிரான்ஸில் இயற்கை எய்திய அவர் மிக நீண்டகால தமிழீழத் தேசிய செயற்பாடுகளில் தம்மை அர்ப்பணித்துக் கடமையாற்றியவராவார்.
பிரான்சில் ஈழச்செயற்பாடுகள் ஆரம்பித்த காலங்களில் தன்னையும் இணைத்துக்கொண்டு பயணப்பட்ட பாலா அவர்கள் அங்கு நடைபெறும் மாவீரர்நாள் நிகழ்வுகள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் அனைத்திலும் தனது காத்திரமான பங்கினை வகித்திருந்தார்.
தான் மட்டுமன்றி தனது துணைவியார், பிள்ளைகள் அனைவரையும் பிரான்சில் விடுதலையின்பால் முன்னெடுக்கப்படும் அனைத்து சாதகமான விடையங்களிலும் பங்குபெற வைத்தவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
தமிழீழ விடுதலையையும் அதனை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஆழமாக
நேசித்த பாலா அவர்கள் தாயகத்தில் இடர்பாடுகளுக்குள் தவித்த பலரது வாழ்வின்
முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்காற்றிய அவரின் இழப்பு பேரிழப்பாகும்.