தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் அனுஷ்டிப்பு(Photos)
மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் (6) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அலுவலகத்தில்,அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.லுஸ்ரின் மேகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும்
உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டு அஞ்சலி
செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










