பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசியக் கொடி நாள் (Photos)
தமிழீழ தேசியக் கொடிநாள் பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடி நாள் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது
இந்த நிகழ்வு லண்டன் மாநகரை மையப்பகுதி Trafalgar square London இல் நேற்று (19.11.2023) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், பிரித்திானிவாழ் தமிழ் மக்கள் ஒன்றுக்கூடி மாவீரர் வாரத்தை வரவேற்றத்துடன், யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச நீதியையும் கோரினர்.

'தமிழீழ தேசிய கொடி' விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் மாவீரர் வாரத்தின் முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்டது. அன்றுமுதல் இந்த நாளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு நிழக்வுகள்
பெருந்தொகையான பிரித்தானிய மக்கள் இந்நிழக்வில் கலந்துகொண்டதுடன், மாவீரர் வாரத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிழக்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலக வரலாற்று மையத்துடன் இணைந்து அனேகமான தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலக வரலாற்று மைய முக்கியஸ்தர்கள், பாலா மாஸ்டர் மற்றும் councillor பரம் நந்தா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவர்களின் கலாச்சார நடனங்களுடனும் பேச்சுக்களுடனும் நடைபெற்ற நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து நேரலையில் தொடர்பு கொண்டு சிறப்புரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri