இலங்கைக்கு வெளியில் உருவாகிவிட்டது தமிழீழம்! ஆபத்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சர்வதேசத்தில் தமிழீழ அரசாங்கத்தை அமைத்து முடித்து விட்டதாகவும், அதன் பிரதமராக சட்டத்தரணி உருத்திர குமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களின் அரசியல் தேவைக்கு அமைய தற்போது தனியான நாட்டை கோரி அதனை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனவும் ஆயுதங்களை மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏந்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவை அனைத்தையும் ஆராயும் போது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |