சர்சையாகும் தமிழ் பிரதேச செயலகம்! CID தொடர்பா! ஹிஸ்புல்லாஹ் மீது விசாரணையா
பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவு படுத்துங்கள் என மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
கோரளைப்பற்று மத்தி அதேபோன்று கோரளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானியை விரைவாக வெளியிடுங்கள் என ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு,அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயம் என்னவென்றால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கக் கூடிய ஐந்து கிராமசேவையாளர் பிரிவுகளையும், அதனோடு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கக் கூடிய இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகளையும் எடுத்து இந்த இரண்டு பிரதேச செயலகங்கள் உருவாக்கின்ற போது அதனோடு இணைத்துக் கொள்ளுங்கள் என்ற மேலதிகமான தகவல்களையும் வெளிப்படுத்துகின்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் களமிறக்கப்படவுள்ள இராணுவத்தினர்! அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



