இலங்கைக்கு வந்து குவியும் வெளிநாட்டு முதலீடுகள்! புலம்பெயர் தமிழர் ஒருவரின் புதிய முயற்சி (Video)
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியின் பிடியில் இருந்து தற்போது மீண்டு வருகிறது.
குறிப்பாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதில் சுற்றுலாத்துறைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த, துறைசார் அமைச்சு பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான சமயத்தில் இலங்கை சுற்றுலாத்துறையில் ஒரு புது மாற்றம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பேருந்து சேவையில் ஈடுபடுகிறது.
தற்போதைய நெருக்கடியான நிலையில் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தின் போது பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இது போன்ற காரணங்களால் சிலர் அதிருப்தி அடையும் நிலையும் உண்டு. எனினும் தற்போது சேவையில் ஈடுபடும் இந்த வித்தியாசமான பேருந்து பல சுற்றுலா பயணிகளை கவருவதாக அமைகிறது.
அந்த பேருந்து தொடர்பில் முழுமையா அறிந்து கொள்ள கீழ்வரும் காணொளியை காண்க