தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா? நிதியமைச்சரிடம் சரமாரி கேள்வி (VIDEO)
புலம்பெயர் தமிழர்களின் அறிவு, திறமை மற்றும் பொருளாதார பலத்தை எவ்வாறு இலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக்கொள்ள முடியுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என அடையாளப்படுத்தினாலும் பெரும்பாலான அமைப்புகள் நாட்டை நேசிக்கும் தரப்பாகவே காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும். புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என அடையாளப்படுத்தினாலும் பெரும்பாலான தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நாட்டை நேசிக்கும் தரப்பாகவே உள்ளனர்.
நாடாக இன்று பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது, இன்றுள்ள சவால்களில் ஜனாதிபதியினால் கோவிட் சவால்களை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்துள்ளது. ஏனைய சகல சவால்களும் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவையாகும்.
செயலணிகளை அமைத்து சவால்களை வெற்றிகொள்வதாக அரசாங்கம் ஒரு சித்திரத்தை காட்டி வருகின்றது. இவ்வாறு செயலணிகள் ஒரு பக்கமும் சட்ட நிறுவனங்கள் இன்னொரு பக்கமும் இயங்கிக்கொண்டுள்ளன.
இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் மக்களின் வரிப்பணமே செலவழிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல செயலணிகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் குறித்து எம்மத்தியில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.
இவர்கள் செயலணிகளுக்கு தகுதியானவர்களா என்ற கேள்வி எழுகின்றது. இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை நாட்டில் பரப்பியுள்ளனர். இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அரசியலுக்காக பயன்படுத்துவதை நாம் நிராகரிக்க வேண்டும்.
சகல இனத்திலும் ஒரு சிறிய குழு இனவாதத்தை பரப்புகின்றது, ஆனால் அதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri