கடுகண்ணாவையில் மண்சரிவில் சிக்கிய தமிழ் வர்த்தகரின் உணவகம்
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று தமிழ் வர்த்தகர் ஒருவரின் உணவகமே மண்சரிவில் சிக்கியுள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்றுக் காலை வீட்டுடன் சேர்ந்த உணவகம் ஒன்றின் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மாவனெல்ல மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த அனைவரும் மாவனெல்ல ஆதார மருத்துவமனையின் 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்சரிவு ஏற்பட்ட போது காலை உணவுக்காக வந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 10 பேர் உணவகத்தில் இருந்துள்ளனர் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட போது உணவகத்தின் உரிமையாளர் அவசர தேவைக்காக வெளியில் சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த உணவகத்தின் உரிமையாளர் 40 வயதான குழந்தைவேல் ரகுநாதன் சசிதரன் ஆவார்.
பாதிக்கப்பட்டவர்களின் விபரம்
இந்த அனர்த்தத்தில் அவரின் மனைவியான நிஷாந்தினி சசிதரன் (வயது 39) மற்றும் மனைவியின் தந்தை இராசலிங்கம் கருணாகரன் (வயது 66) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிர் தப்பித்துள்ளனர்.

மண்மேட்டுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காகப் பொலிஸார், இராணுவத்தினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட குழுவினர் பல மணிநேரம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேர் காயங்களுடன் வெளியே கொண்டு வரப்பட்டு, பொலிஸாரால் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த மண்சரிவு அனர்த்தத்தில் உணவகத்தில் நேநீர் பருகிக் கொண்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு மதுசங்க சமரகோன் (வயது 31) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam