அவுஸ்திரேலியாவில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக இளைஞர்! வெளியான தகவல்
அவுஸ்திரேலியாவில் பொலிஸாரால் தமிழக இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே நிலையத்தில், துாய்மை பணியாளர் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சிட்னி பொலிஸாரை தாக்க முயன்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து இரண்டு பொலிஸார் இளைஞரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், நெஞ்சில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் இளைஞரை பரிசோதித்த வைத்தியர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வழக்கு தாக்கல்
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த சையது அகமது மகன் முகமது ரஹமத்துல்லா,32, என்பதும், பிரிட்ஜிங் விசாவில், கடந்த 2019ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்று, உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
முகமது ரஹமத்துல்லாவால் தாக்கப்பட்ட காயமடைந்த துாய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர் வழக்கு தொடர்ந்துள்ளதுடன்,வழக்கு விரைவில் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
