சுவிஸில் வாழ் இலங்கை தமிழர்கள் சிலருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.
செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தமிழ் இளைஞன், புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பப்பட்ட குறுந்தகவலை பெற்றுள்ளார்.
பண மோசடி
இதனை உண்மையென நம்பிய இளைஞன், அதிலுள்ள லிங்கினை கிளிக் செய்துள்ளார்.
அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். சில நிமிடங்களில் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறப்படும் அறிவுறுத்தலை பெற்றுள்ளார்.
இதன்போது வங்கியில் நிலுவையில் இருந்த சுமார் 1300 பிராங்குகள் மோசடியாளர்களில் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இவ்வாறான மோசடிகளில் சிக்கிய பல தமிழர்கள் பணத்தை இழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
