சிலாபத்தில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞன்
சிலாபத்தில் கூரைத்தகடு தொழிற்சாலையில் பணியாற்றிய இளைஞன், கூரைத் தகடுகள் நிரப்பப்பட்ட கொள்கலனில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஆரச்சிகட்டுவ, அனவிலுண்தாவ பகுதியில் இந்த விபத்து நேற்று மதியம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் உடப்புவ பகுதியை சேர்ந்த காந்திபன் சஷிதரன் என்ற 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்தார். மூன்று இளைஞர்களுடன் இணைந்து கூரைத் தகடுகளை கொள்கலனில் ஏற்றி, மற்றுமொரு இடத்தில் இறக்கச் சென்றார்.
இளைஞன் மரணம்
இதன்போது, கொள்கலன் வாகனத்தின் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியுள்ளதால் கூரைத் தகடுகளுக்குள் சிக்கிய இளைஞன், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கு பணியாற்றியவர்களின் அலட்சியமே காரணம் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் இளைஞர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திரையரங்கில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.. OTT-யில் பட்டையை கிளப்பும் சக்தி திருமகன்.. பாராட்டிய இயக்குநர் ஷங்கர் Cineulagam